துணை ராணுவப்படையினர் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
துணை ராணுவப்படையினர் ஹோலி பண்டிகை
புதுக்கோட்டை:
வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்காக வடமாநிலத்தில் இருந்து துணை ராணுவப் படையினர் தமிழகம் வந்துள்ளனர். அந்த வகையில் புதுக்கோட்டைக்கு வந்த துணை ராணுவப்படையினர் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளி அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று ஹோலி பண்டிகையையொட்டி துணை ராணுவப்படையினர் உற்சாகமாக கொண்டாடினர். வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவியும், ஆடல் பாடலுடன் நடனமாடி உற்சாகமாக கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், போலீஸ் தேர்தல் பார்வையாளர், உள்ளூர் போலீசார் கலந்து கொண்டனர். மேலும் துணை ராணுவப்படையினருக்கு பண்டிகை வாழ்த்து தெரிவித்தனர். அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் மீதும் துணை ராணுவ படையினர் வண்ணப்பொடிகளை தூவி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். இந்நிகழ்வில் துணை ராணுவப்படை அதிகாரிகள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story