வாக்களிக்க அச்சுறுத்தல் இருக்கிறதா?


வாக்களிக்க அச்சுறுத்தல் இருக்கிறதா?
x
தினத்தந்தி 30 March 2021 12:20 AM IST (Updated: 30 March 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடியில் ஆய்வு செய்த தேர்தல் பொது பார்வையாளர் பொதுமக்களிடம் வாக்களிக்க அச்சுறுத்தல் இருக்கிறதா? என கேட்டறிந்தார்.

சிவகங்கை,

சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடியில் ஆய்வு செய்த தேர்தல் பொது பார்வையாளர் பொதுமக்களிடம் வாக்களிக்க அச்சுறுத்தல் இருக்கிறதா? என கேட்டறிந்தார்.

பதற்றமான வாக்குச்சாவடிகள்

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய 4 தொகுதிகளிலும் சேர்த்து 1,679 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 163 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து சிவகங்கை தொகுதி பொது பார்வையாளர் முத்துகிருஷ்ணன் சங்கரநாராயணன் காளையார்கோவில் ஊராட்சியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என காவல் துறையால் கண்டறியப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவர் காளையார்கோவில், சூசையப்பர்பட்டிணம், மறவமங்களம் ஆகிய ஊராட்சிகளுக்கு சென்று அங்குள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் தயாராக உள்ளதா? என ஆய்வு செய்தார்.

அச்சுறுத்தல் இருக்கிறதா?

பின்னர் அப்பகுதி மக்களிடம் நீங்கள் ஒவ்வொரு முறை வாக்களிக்க வரும்போது ஏதேனும் அச்சுறுத்தல் உள்ளதா? தற்பொழுது ஏதேனும் அச்சுறுத்தல் செய்கிறார்களா? என கேட்டார். அதற்கு பொதுமக்கள் தங்களை யாரும் வாக்களிக்க அச்சுறுத்தவில்லை என்றனர்.
இதை தொடர்ந்து அவர் உங்களுக்கு ஏதேனும் காவல்துறை உதவி தேவைப்பட்டாலும் மற்றும் தோ்தல் தொடர்பான தகவல் தெரிவிக்க விரும்பினாலும் எனது (83000 44263) தொலைபேசியில் தெரிவிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Next Story