சாலையோரத்தில் கொட்டப்பட்டு இருந்த கழிவுகளில் திடீர் தீ


சாலையோரத்தில் கொட்டப்பட்டு இருந்த கழிவுகளில் திடீர் தீ
x
தினத்தந்தி 30 March 2021 12:30 AM IST (Updated: 30 March 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

சாலையோரத்தில் கொட்டப்பட்டு இருந்த கழிவுகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

நொய்யல்
சேலத்தில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சுற்றுப்பகுதிகளில் சேர்ந்த கோழி கடைக்காரர்கள், அப்பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு கடைகளில் உள்ள கழிவுகளை கொட்டி வருகின்றனர். இந்நிலையில்தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குவியல் குவியலாக கொட்டப்பட்டிருந்த கழிவுகளில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதனால் புகைமூட்டம் அதிகளவில் வரத் தொடங்கியது.அதனால் சாலை நெடுகிளும் புகைமூட்டம் அதிக அளவில் இருந்தது. சாலையில் புகை மூட்டம் காரணமாக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்துஅப் பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்்ச்சி அடித்து அணைத்தனர்.. இருப்பினும் சாலை ஓரத்தில் நெடுகிலும் புகைமூட்டம் இருந்ததால் சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் அவதி அடைந்தனர். 

Next Story