திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தி்ல் ஈடுபட்டவர்கள் கையில் தராசு வைத்திருந்தனர். மேலும் முறத்தில் நெல்மணிகளை தட்டி தூற்றுவதுபோல் செய்து காட்டினர்.
அப்போது அவர்கள், மக்கள் வரிைய மக்களுக்கே செலவிடும் கூட்டணி கட்சிக்கு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். உள்ளூர் உற்பத்தியை அரசு திட்டத்துக்குப் பயன்படுத்த அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும். ரேஷன் மற்றும் சத்துணவுக்கு தேவைப்படும் நெல் நேரடி கொள்முதல் நிலையம் மூலமாக வாங்க வேண்டும், என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story