பேரணாம்பட்டு வனச்சரகத்தில் வன விலங்குகளுக்காக டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி


பேரணாம்பட்டு வனச்சரகத்தில்  வன விலங்குகளுக்காக   டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி
x
தினத்தந்தி 30 March 2021 1:08 AM IST (Updated: 30 March 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு வனச்சரகத்தில் வன விலங்குகளுக்காக டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு வனப்பகுதியில் உள்ள மான்கள், கரடிகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் கோடைக்காலத்தில் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்து விடுகின்றன. அவ்வாறு வரும்போது எதிர்பாராத விதமாக உயிர் சேதம் ஏற்படுகிறது.

வன விலங்குகளின் குடிநீர் பற்றாக்குைறயை போக்க, தண்ணீர் தேடி ஊருக்குள் வராமல் தடுக்க வேலூர் மாவட்ட வன அலுவலர் பார்கவதேஜா, உதவி வன அலுவலர் முரளிதரன் ஆகியோர் உத்தரவின்ேபரில் கோடைக்காலத்தை முன்னிட்டு பேரணாம்பட்டு வனச் சரக பகுதியில் வனச் சரகர் சங்கரய்யா தலைமையில் வனவர்கள் ஹரி, தரணி மற்றும் வனக் காப்பாளர் செல்வம், வனக் காவலர் ரவி ஆகியோர் பல்லலகுப்பத்தில் 4 இடங்கள், பத்தலப்பல்லி சோதனைச்சாவடியில் ஒரு இடம், எருக்கம்பட்டில் 4 இடங்கள், அரவட்லா மலைக் கிராமத்தில் 4 இடங்கள்,  சேம்பள்ளியில் 1 இடம், சேராங்கல் கிராமத்தில் 2 இடங்கள் என ஆக மொத்தம் 17 இடங்களில் மான் குட்டைகள் எனப்படும் தண்ணீர் தொட்டிகளில் 15 நாட்களுக்கு ஒரு முைற சுழற்சி முறையில் டிராக்டர்கள் மும் தண்ணீர் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story