சேரன்மாதேவி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி


சேரன்மாதேவி அருகே  மரத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
x
தினத்தந்தி 30 March 2021 1:10 AM IST (Updated: 30 March 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

சேரன்மாதேவி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார்.

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி அருகே உள்ள புதுக்குடி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகையா மகன் மருதுடையார் (வயது 35). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள வேப்பமரத்தில் ஏறி மரத்தை வெட்டியதாக கூறப்படுகிறது. 

அப்போது மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த மருதுடையார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story