களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி தேரோட்டம்
களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி தேரோட்டம் நடந்தது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 20-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
10-ம் நாள் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் வரதராஜ பெருமாள் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமி தேவியர்களுடன், விஷேச அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார்.
அதன்பின் மாலையில் தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் நிலையை வந்தடைந்ததும் தேர் தடம் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 11-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்த்தவாரி நடக்கிறது.
Related Tags :
Next Story