பல்லடம் அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் வீடுகளில் 2 வது நாளாக கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
பல்லடம் அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் வீடுகளில் 2 வது நாளாக கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
பல்லடம்
பல்லடம் அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் வீடுகளில் 2-வது நாளாக கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
குடிநீர் பிரச்சினை
பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை என்றும், ஊராட்சி நிர்வாகம் குடியிருப்பு வீடுகளுக்கு அதிக அளவில் வரிவிதிப்பு செய்துள்ளதாகவும், கூறி, நேற்று முன்தினம் அங்குள்ள வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும், காலிக்குடங்களுடன், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றிய தகவலறிந்து சம்பவ இடம் வந்த, பல்லடம் போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி, தற்போது தேர்தல் சமயமாக உள்ளது, உங்களது கோரிக்கைகளை அதிகாரிகளைச் சந்தித்து, தெரிவிக்கலாம் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில் நேற்று, 2-வது நாளாக மீண்டும் போராட்டம் நடத்த அவர்கள் தயாரானபோது, தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார், இந்த பிரச்சினை குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். வீட்டுவசதி வாரிய பொறியாளர் விசாகவேல், குடிநீர் வாரிய ஜெய்கணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் குருவம்மாள், உள்ளிட்ட அதிகாரிகள், சம்பவ இடம் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் இன்னும் ஒரு வார காலத்திற்கு குடிநீர் வழங்கும் பொறுப்பை குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைத்து சரிபார்ப்பது என்றும், தேர்தல் முடிந்தவுடன், வரிவிதிப்பு குறித்து பேசிக் கொள்ளலாம் என்றும், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
Related Tags :
Next Story