‘அவன், இவன்’ பட வழக்கு: அம்பை கோர்ட்டில் நடிகர் ஆர்யா ஆஜர்


‘அவன், இவன்’ பட வழக்கு:  அம்பை கோர்ட்டில் நடிகர் ஆர்யா ஆஜர்
x
தினத்தந்தி 30 March 2021 1:42 AM IST (Updated: 30 March 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

‘அவன், இவன்’ பட வழக்கு தொடர்பான விசாரணைக்காக நடிகர் ஆர்யா அம்பை கோர்ட்டில் ஆஜரானார்.

அம்பை:
‘அவன், இவன்’ பட வழக்கு தொடர்பான விசாரணைக்காக நடிகர் ஆர்யா அம்பை கோர்ட்டில் ஆஜரானார். 

அவதூறாக சித்தரித்ததாக வழக்கு

கடந்த 2011-ம் ஆண்டு நடிகர்கள் விஷால், ஆர்யா ஆகியோர் நடிப்பில் டைரக்டர் பாலா இயக்கத்தில் ‘அவன் இவன்’ படம் வெளியானது. அந்த படத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் பற்றியும், சிங்கம்பட்டி ஜமீன்தார் பற்றியும் அவதூறாக சித்திரித்ததாக சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்த சங்கராத்மஜன் என்பவர் அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் நடிகர் ஆர்யா, டைரக்டர் பாலா ஆகியோர் ஏற்கனவே ஆஜராகி இருந்தனர். கடந்த தடவை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நடிகர் ஆர்யா மார்ச் மாதம் 29-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. 

நடிகர் ஆர்யா ஆஜர்

இந்த நிலையில் இந்த வழக்கு அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடுவர் கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் ஆர்யா ஆஜரானார். நடிகர் ஆர்யாவின் சமரசத்தை மனுதாரர் ஏற்றுக்கொண்டதால் அவரது தரப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வக்கீல் ரமேஷ், நடிகர் ஆர்யா தரப்பில் வக்கீல்கள் ஜெரோம் ஜோசப், காந்திமதி நாதன் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

Next Story