விளையாட்டு வினையானது: தீப்பெட்டியை பற்ற வைத்து விளையாடிய சிறுமி தீயில் கருகி சாவு


விளையாட்டு வினையானது: தீப்பெட்டியை பற்ற வைத்து விளையாடிய சிறுமி தீயில் கருகி சாவு
x
தினத்தந்தி 30 March 2021 5:01 AM IST (Updated: 30 March 2021 5:01 AM IST)
t-max-icont-min-icon

தீப்பெட்டியை பற்ற வைத்து விளையாடிய சிறுமி தீயில் கருகி சாவு

கொண்டலாம்பட்டி:
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள வேடுகத்தாம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மகள் ஜானகி (வயது 15). கடந்த 17-ந் தேதி இந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாத போது விளையாடி கொண்டு இருந்தார். அப்போது அவர் தீப்பெட்டியை எடுத்துக்கொண்டு விளையாட்டுத்தனமாக அதனை உரசி, உரசி பார்த்துள்ளார். திடீரென்று யாரும் எதிர்பாராத நிலையில் ஜானகியின் உடலில் தீப்பரவி காயங்கள் ஏற்பட்டு விட்டன. 
இதில் வலி தாங்காமல் அந்த சிறுமி கதறி அழுதார். உடனே அக்கம்,பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து சிறுமியை காப்பாற்ற முயன்று தீயை அணைத்தனர். பின்னர் 108 ஆம்புலன்சை வரவழைத்து அதன் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கே சிகிச்சை பெற்றுவந்த ஜானகி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story