சேலம் மாவட்டத்தில் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு


சேலம்  மாவட்டத்தில் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 30 March 2021 5:01 AM IST (Updated: 30 March 2021 5:01 AM IST)
t-max-icont-min-icon

49 பேருக்கு கொரோனா பாதிப்பு

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 49 பேர் பாதிக்கப்பட்டனர்.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 47 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 49 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது.
குறிப்பாக மாநகர் பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 39 பேர், ஓமலூரில் 3 பேர், ஆத்தூரில் 2 பேர், நங்கவள்ளி, அயோத்தியாப்பட்டணம், தலைவாசல், நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
40 பேர் டிஸ்சார்ஜ்
தர்மபுரியில் இருந்து சேலம் வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 397 ஆக அதிகரித்து உள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 40 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். 293 பேருக்கு தொடர்ந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story