சேலத்தில் வாலிபர்களிடம் பணம் திருடிய 2 பேர் கைது
வாலிபர்களிடம் பணம் திருடிய 2 பேர் கைது
சேலம்:
சேலம் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 28). இவர் நேற்று முன்தினம் சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். பஸ் புதிய பஸ் நிலையம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது சதீஷ் சட்டைப்பையில் இருந்த ரூ.300-யை மர்ம நபர் ஒருவர் நைசாக திருடினார். இதை பார்த்த பஸ்சில் பயணம் செய்த சக பயணிகள் அந்த நபரை பிடித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் நெத்திமேடு பகுதியை சேர்ந்த ராஜ் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் அருகே உள்ள மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (24) என்பவர் சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். புதிய பஸ் நிலையம் அருகே பஸ் வந்த போது அவரிடம் இருந்த ரூ.300-யை மர்ம நபர் ஒருவர் திருடினார். இதையடுத்து அவரை பயணிகள் பிடித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அவர் சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த அப்துல்ரகுமான் (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story