வாக்குச்சாவடிகளை தயார் நிலையில் வைக்க உத்தரவு


வாக்குச்சாவடிகளை தயார் நிலையில் வைக்க உத்தரவு
x
தினத்தந்தி 30 March 2021 7:46 AM IST (Updated: 30 March 2021 7:46 AM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வாக்குச்சாவடிகளை தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

சுல்தான்பேட்டை

தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. 

சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வதம்பச்சேரி, வாரப்பட்டி, குமாரபாளையம், செஞ்சேரிப்புத்தூர், பூராண்டம்பாளையம், ஜல்லிபட்டி, அப்பநாயக்கன்பட்டி உள்பட 20 ஊராட்சிகளில் மொத்தம் 66 ஆயிரத்து 696 வாக்காளர்கள் உள்ளனர். 

இதில், ஆண் வாக்காளர்கள் 32 ஆயிரத்து 338 பேர், பெண் வாக்காளர்கள் 34 ஆயிரத்து 353 பேர், 3-ம் பாலினத்தவர் 5 பேர் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களைவிட பெண்கள் 2 ஆயிரத்து 15 பேர் அதிகம் ஆகும்.

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 81 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 

இந்த வாக்குசாவடிகள் அனைத்திலும் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தயார் நிலையில் வைத்திருக்க தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். 

இதையடுத்து அங்கு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.


Next Story