திருவாரூர் தொகுதி மக்களின் தொண்டனாக இருந்து பணியாற்றுவேன்; அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் உறுதி
திருவாரூர் தொகுதி மக்களின் தொண்டனாக இருந்து பணியாற்றுவேன் என்று அ.தி.மு.க.வேட்பாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம் உறுதி அளித்தார்.
தர்பூசணி விற்று வாக்குசேகரிப்பு
திருவாரூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று திருவாரூர் ஒன்றியத்தில் புலிவலம், கூடூர், கல்யாணசுந்தரபுரம், மாங்குடி, திருநெய்பேர், குன்னியூர், வேப்பத்தாங்குடி, பின்னவாசல், திருக்காரவாசல், புதூர், உமாமகேஸ்வரபுரம், ஆத்தூர், வடகரை, கல்யாணமகாதேவி, பெருங்குடி, கொட்டாரக்குடி, வேலங்குடி ஆகிய இடங்களில் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் போது ஒரு தர்பூசணி கடைக்கு சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அங்கிருந்தவர்களுக்கு தர்பூசணி பழங்களை விற்பனை செய்து அந்த வியாபாரிக்கு உதவினார். பிரசாரத்திற்கு சென்ற வேட்பாளரை பெண்கள் மலர் தூவி வரவேற்றனர்.
மக்கள் பணியாற்றுவேன்
அப்போது ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
நான் சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இத்தொகுதி மக்களின் நலனுக்காகவும், தொகுதியின் வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன். உங்களில் ஒருவனாக, உங்களின் தொண்டனாக இருந்து மக்கள் பணியாற்றுவேன். இந்த தொகுதியை முழுமையான வளர்ச்சிபெற்ற தொகுதியாக மாற்றி காட்டுவேன். இவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி தருவேன். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story