ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.2½ லட்சம் பறிமுதல்
ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.2½ லட்சம் பறிமுதல்
ஊட்டி
ஊட்டி-கோத்தகிரி சாலை தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் நொண்டிமேடு பகுதியை சேர்ந்த மேத்யூ என்பவர் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.60 ஆயிரம் கொண்டு வந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த பணம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
ஊட்டி-மஞ்சூர் சாலை காந்திபேட்டை பகுதியில் ஒரு வாகனத்தில் இருந்து ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.55 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்தனர். மஞ்சூர் அருகே காத்தாடிமட்டம் பகுதியில் கடநாடு கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவர் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று ஊட்டி தொகுதியில் ரூ.2 லட்சத்து 63 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story