கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும் முதலில் குரல் கொடுப்பது அ.தி.மு.க.அரசு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும் முதலில் குரல் கொடுப்பது அ.தி.மு.க.அரசு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
திண்டுக்கல்,
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்க ளுக்கு எந்த பிரச்சினை என்றாலும் முதலில் குரல் கொடுப்பது அ.தி.மு.க. அரசு என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
முஸ்லிம் பிரமுகர்கள்
திண்டுக்கல் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று நாட்டாண்மை காஜா மைதீன் மற்றும் முஸ்லிம் பிரமுகர்களை நேரில் சந்தித்து வாக்குசேரித்தார். அப்போது அவருக்கு முஸ்லிம் பிரமுகர்கள் சால்வை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் மருதராஜ், கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதிமுருகன், தொழில் அதிபர்கள் நிஷார் அகமதுகான், ஜபருல்லா, அபுதாகிர், நாகூர்கனி, சாதிக், ரியாஜ், இக்பால், சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் ஆமினாரகிம், திபூர்சியஸ், ஆரோக்கியசங்கர், அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெ.எம்.எஸ்.இக்பால், மாவட்ட நிர்வாகிகள் மீனாட்சிசுந்தரம், ராஜேஸ்கண்ணா, நகர கூட்டுறவு வங்கி தலைவர் வீரமார்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பிரசார கூட்டம்
அதையடுத்து பேகம்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:&
முஸ்லிம்களுக்கு எதிராக அ.தி.மு.க. அரசு எப்போதும் செயல்படாது. ஆனால் எதிர்க்கட்சியினர் வேண்டும் என்றே பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக எந்த ஒரு சட்டம் இயற்றப்பட்டாலும், அவர்களுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் அவர்களுக்காக முதலில் குரல் கொடுப்பது அ.தி.மு.க. அரசு தான். ஹஜ் புனித பயணம் செல்லும் திண்டுக்கல்லை சேர்ந்த முஸ்லிம்களை சென்னைக்கு அழைத்துச்சென்று முதல்&அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்க வைத்து அவர்களுக்கு ஹஜ் புனித பயணத்துக்கு கூடுதல் உதவி தொகை பெற்றுக்கொடுத்தவன் நான் என்பதை இந்த இடத்தில் பெருமையாகவே கூறிக்கொள்கிறேன்.
மேலும் ஜமாத், வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது என்று தெரிந்ததும் உடனே நான் அந்த பிரச்சினையில் தலையிட்டு ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு கொடுத்துள்ளேன்.
மணி மண்டபம்
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் ஹைதர்அலி, திப்புசுல்தான் ஆகியோருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டது. பிரதமர் மோடி கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் சிறுபான்மையின மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அறிந்ததும், திண்டுக்கல்லில் உள்ள அனைத்து ஜமாத் நிர்வாகி களையும் அழைத்துச்சென்று முதல்&அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வைத்து முஸ்லிம்களின் அச்சம் குறித்து தெரிவித்தேன். அவரும் அந்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டேன் என்றார். எனது சட்ட மன்ற தொகுதி நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தில் பேகம்பூர் அடக்கஸ்தலத்துக்கு சுற்றுச்சுவர், பேவர் பிளாக் கற்கள் பதிப்பு, காத்திருப்போர் கூடம் அமைத்து கொடுத்துள்ளேன்.
65 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனை குளத்தை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்த போது, அதனை ஜமாத்திடமே மீட்டுக் கொடுத்தேன். கொரோனா காலகட்டத்தில் பேகம்பூர் பகுதி மக்களின் நலனுக்காக பால், காய்கறிகள் உடனே கிடைக்க நடவடிக்கை எடுத்ததோடு, அந்த பகுதியில் மளிகை கடைகளை திறக்கவும் அனுமதி வாங்கி கொடுத்தேன். அத்துடன் எனது சொந்த செலவில் ஜமாத்தார்கள் மூலம் முஸ்லிம்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினேன். பேகம்பூர் மாஸ்க் மற்றும் தர்கா சார்பில் நடத்தப்படும் ஹஜ்ரத் அமீருன்னிஷா ஓரியண்டல் பள்ளியை மூட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த போது, அதனை தடுத்து நிறுத்தினேன்.
இதுமட்டுமின்றி பேகம்பூர்&மதுரை இருவழிப்பாதை சாலை, முத்தாலம்மன் கோவில் அருகே ஆரம்ப சுகாதார நிலையம், பேகம்பூர் 39-வது வார்டு பகுதியில் சாலை, முஸ்லிம் பெண்கள் மேல்படிப்பு படிக்க அவர் லேடி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கல்லூரி கட்டி முடிக்க தமிழக அரசிடம் இருந்து ஆணை பெற்று கொடுத்தேன். இந்த கல்லூரியில் முஸ்லிம் பெண்கள் கல்லூரி படிப்பை தொடர செய்ததை எனது பாக்கியமாக கருதுகிறேன். மேலும் பேகம்பூரில் மிகப்பெரிய நூலகம் அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.
பாதுகாப்பு அரண்
அதையடுத்து அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் பேசுகையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது போல் முஸ்லிம்களுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறார். டிசம்பர் 6&ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பே முஸ்லிம்களை கைது செய்து சிறையில் அடைத்தது தி.மு.க. ஆட்சியில் தான் நடந்தது. ஆனால் தற்போது தேர்தலுக்காக தி.மு.க.வினர் சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள்.
உண்மையிலேயே முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருப்பது அ.தி.மு.க. அரசு தான். மேலும் நோன்பு கஞ்சிக்காக ஏற்கனவே 4 ஆயிரம் டன் அரிசி வழங்கப்பட்டது. தற்போது அதனை 4 ஆயிரத்து 545 டன்னாக உயர்த்தி வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். எனவே முஸ்லிம்களின் நலனில் அக்கறை காட்டும் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.
Related Tags :
Next Story