தேங்காய் வியாபாரியிடம் ரூ.1.40 லட்சம் பறிமுதல்
ஆண்டிப்பட்டி அருகே தேங்காய் வியாபாரியிடம் ரூ.1.40 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
ஆண்டிப்பட்டி :
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கணவாய் மலைப்பகுதியில் உள்ள போலீஸ் சோதனை சாவடியில் நேற்று காலை தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்துராமன் தலைமையில் அதிகாரிகளும், போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில் சரக்கு வேனில் வந்தவர் மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்த தேங்காய் வியாபாரியான முகேந்திரபாண்டி (24) என்பதும், அவர் கடமலைக்குண்டு பகுதிக்கு தேங்காய் வாங்குவதற்காக ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கொண்டு வந்ததும் தெரியவந்தது. ஆனால் அவரிடம் பணத்திற்கான உரிய ஆவணம் இல்லை. இதையடுத்து தேர்தல் பறக்கும்படையினர் முகேந்திரபாண்டியிடம் இருந்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை பறிமுதல் செய்து ஆண்டிப்பட்டி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story