தூத்துக்குடியில் சரள்மண் கடத்திய வாலிபர் கைது


தூத்துக்குடியில் சரள்மண் கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 30 March 2021 5:49 PM IST (Updated: 30 March 2021 5:49 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் சரள்மண் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரி சுகந்தா ராஷிமா இந்திய உணவுக்கழக குடோன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு லாரியை நிறுத்தி அவர் தணிக்கை செய்தார். அந்த லாரியில் புதுப்பட்டியை சேர்ந்த சின்னத்துரை மகன் காளிமுத்து (வயது 26) என்பவர் உரிய அனுமதியின்றி சரள்மண் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அந்த லாரியை பறிமுதல் செய்து,  சிப்காட் போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து காளிமுத்தை கைது செய்தார். அவரிடம் இருந்து லாரி மற்றும் 6 யூனிட் சரள் மண்ணையும் பறிமுதல் செய்தார்.

Next Story