காங்கிரஸ் வேட்பாளர் அரசன் அசோகன் சிவகாசி நகர பகுதியில் தீவிர பிரச்சாரம்
சிவகாசி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் அசோகன் கடந்த சில நாட்களாக தொகுதியின் பல்வேறு பகுதியில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
சிவகாசி,
சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட கருப்பண்ணன் தெரு, ஞானகிரி ரோடு, காரனேசன் காலனி, பழனியாண்டவர் காலனி , ஜானகிராம் ஓட்டல், கல்லரைத்தெரு, சோலை காலனி, பாரதிநகர், சுசுப்பிர மணியபுரம் காலனி ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் வாக்கு சேகரித்தார். அவருடன் சிவகாசி நகர்மன்ற முன்னாள் தலைவர் சபையர் ஞானசேகரன், நகர தலைவர் குமரன், திருத்தங்கல் மைக்கேல், தெற்கு வட்டார தலைவர் பைபாஸ் வைரம், நகர துணைத்தலைவர் முத்துமணி, சாமுவேல் நாடார், சின்னத்தம்பி, மல்லீஸ்வரன் உள்பட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நேற்று மாரியம்மன் கோவில், பி.கே.எஸ்.ஏ. ஆறுமுகம் ரோடு, வாணக்காரர் ரோடு, எஸ்.எம்.கே.தெரு, அம்மன் கோவில்பட்டி தெற்கு தெரு, அம்மன் கோவில்பட்டி நடுதெரு, புதுதெரு, பிச்சாண்டி தெரு, மாரிமுத்து தெரு, காளியம்மன் கோவில்தெரு ஆகிய இடங்களில் நடந்துசென்று வீடு, வீடாக ஓட்டு வேட்டை யாடினார். காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் பிரச்சாரத்தின் போது இளைஞர்கள், பட்டா-சு தொழிலாளர்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அம்மன் கோவில்பட்டி பகுதியில் பிரச்சாரம் செய்த போது நகர துணைத்தலைவர் முத்துமணி ஏற்பாட்டின் பேரில் பெண்கள் மலர் தூவி காங்கிரஸ் வேட்பாளர் அசோகனை வரவேற்றனர்.
அப்போது காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் வாக்காளர்கள் மத்தியில் பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சி சார்பில் நான் இந்த தொகுதியில் போட்டி யிடுகிறேன். ஏற்கனவே சிவகாசி நகராட்சி துணைத்தலைவராக பதவி வகித்த அனுபவம் எனக்கு இருக்கிறது. நான் நகர்மன்ற துணைத்தலைவராக இருந்த போது சிவகாசி நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி மக்களிடம் பாராட்டு பெற்றுள்ளேன். தற்போது அந்த சாதனை யை சிவகாசி சட்டமன்ற தொகுதி முழுவதும் செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அதனால் நீங்கள் எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்கு கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். நான் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட பின்னர் இந்த பகுதிக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து கொடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story