ஆசிரியர் வீட்டில் 30 பவுன் நகை திருட்டு


ஆசிரியர் வீட்டில் 30 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 30 March 2021 10:23 PM IST (Updated: 30 March 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி அருகே ஆசிரியர் வீட்டில் 30 பவுன் நகை திருடப்பட்டது.

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள சூராணம் கிராமத்தை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மனைவி விக்டோரியா ராணி. இவர்கள் இருவரும் ஆசிரியர்கள். இவர்களது மகள் கார்ளா சிவகங்கை பள்ளியில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் மகளை பார்ப்பதற்காக கணவன்-மனைவி இருவரும் சிவகங்கை சென்றனர். பின்னர் அங்கு மகளை பார்த்து விட்டு வீடு திரும்பினார்கள். வீட்டின் முன்னால் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டு இருந்தது. கதவு உடைக்கப்பட்டதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வீ்ட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story