3 பேர் திருப்புவனம் கோர்ட்டில் சரண்


3 பேர் திருப்புவனம் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 30 March 2021 10:28 PM IST (Updated: 30 March 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அருகே கொலை வழக்கில் 3 பேர் திருப்புவனம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை அருகே அழுபிள்ளைதாங்கி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா(60). விவசாயி. இவருடைய மகன் சாமிநாதன் (35). இவர்கள் அதே கிராமத்தில் வெள்ளாடுகளை வளர்த்து வந்தனர். கருப்பையாவின் தங்கை மூக்காயி அருகில் உள்ள பில்லூர் கிராமத்தில் வசித்து வருகிறார். அவரது மகன்கள் தாமோதரன், திரிசங்கு, சுந்தர்ராஜ், சிங்கராஜ்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அழுபிள்ளைதாங்கி கண்மாய்க்குள் கருப்பையாவும், சாமிநாதனும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடைய ஆட்டை, தாமோதரனுடைய நாய் கடித்து உள்ளது. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தாமோதரன், திரிசங்கு, சுந்தர்ராஜ், சிங்கராஜ் ஆகிய 4 பேரும் சேர்்ந்து கருப்பையா, சாமிநாதன் ஆகிய இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு போராடிய சாமிநாதனை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் முத்துமீனாட்சி, சப்-இன்ஸ்பெக்டர் வாசிவம், வழக்குபதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.இந்த வழக்கில் போலீசார் தேடிய தாமோதரன் (35) திரிசங்கு (44) சிங்கராஜ் (38) ஆகிய 3 பேரும் திருப்புவனத்தில் உள்ள ஜே.எம். கோர்ட்டில் சரண் அடைந்தனர். தலைமறைவாக உள்ள சுந்தர்ராஜை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story