விழுப்புரம் மாவட்டத்தில் பறக்கும் படையினருடன் மத்திய பாதுகாப்பு படையினரும் இணைந்து வாகன சோதனை


விழுப்புரம் மாவட்டத்தில் பறக்கும் படையினருடன் மத்திய பாதுகாப்பு படையினரும் இணைந்து வாகன சோதனை
x
தினத்தந்தி 30 March 2021 10:37 PM IST (Updated: 30 March 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் பறக்கும் படையினருடன் மத்திய பாதுகாப்பு படையினரும் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

விழுப்புரம், 

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரு தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் 21 பறக்கும் படை குழுக்களும், ஒரு தொகுதிக்கு ஒரு குழு வீதம் 7 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு அந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இதுதவிர துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு குழு வீதம் காவல்துறையின் சார்பில் 7 சிறப்புக்குழு அமைக்கப்பட்டு அவர்களும் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பறக்கும் படையினருடன் மத்திய பாதுகாப்பு படையும் இணைந்து சோதனை நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்களுடன் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் உதவியுடன் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட எல்லைப்பகுதிகளிலும் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story