கஞ்சா வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம்


கஞ்சா வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம்
x
தினத்தந்தி 30 March 2021 11:41 PM IST (Updated: 30 March 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

கஞ்சா வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

புதுக்கோட்டை, மார்ச்.31-
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அம்பாள்புரத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது38). இவர் வீட்டில் 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார். இவரை போலீசார் கைது செய்து புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தொடர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த தேவேந்திரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உமாமகேஸ்வரிக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து தேவேந்திரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அதற்கான நகலில் கையெழுத்து பெற்றனர். மேலும் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story