வாகன சோதனையை தீவிரப்படுத்த கூடுதலாக 10 குழுக்கள் அமைப்பு


வாகன சோதனையை தீவிரப்படுத்த கூடுதலாக 10 குழுக்கள் அமைப்பு
x
தினத்தந்தி 31 March 2021 12:07 AM IST (Updated: 31 March 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் வாகன சோதனையை தீவிரப்படுத்த கூடுதலாக 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் வாகன சோதனையை தீவிரப்படுத்த கூடுதலாக 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பறக்கும் படை

சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதை தடுக்க வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய தொகுதிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்த ஒரு தொகுதிக்கு 9 பறக்கும் படைகள், 9 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தேர்தல் நெருங்குவதால் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் அதிக அளவில் பட்டுவாடா செய்ய வாய்ப்பு உள்ளது. 
இதை கண்காணிக்கவும், வாகன சோதனையை தீவிரப்படுத்தவும் தற்போது கூடுதலாக ஒரு தொகுதிக்கு 2 நிலை கண்காணிப்பு குழுக்கள் வீதம் மாவட்டத்தில் 10 குழுக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் பணியாற்றுவதற்கு துணை ராணுவத்தினர், அரசு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கூடுதலாக 10 குழுக்கள்

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

தேர்தல் நெருங்கும் நிலையில் வாகன சோதனையை தீவிரப்படுத்தும் வகையில் கூடுதலாக 10 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

அதில் பேசிய கலெக்டர், வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும், சந்தேகப்படும் படியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் சோதனை செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும் பணப்பட்டுவாடாவை தடுப்பது தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கினார். 

இந்த கூட்டத்தில் செலவின பார்வையாளர்கள்ஆதர்ஷ்ஹர்ஷ், அமித்கடாம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை தெரிவித்தனர். இக்குழுவினர் நள்ளிரவு முதல் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story