புகை மூட்டத்தால் மக்கள் அவதி
முத்துப்பேட்டை அருகே சாலையோர குப்பையில் தீப்பிடித்தது. இதனால் புைக மூட்டத்தில் சிக்கி மக்கள் அவதிப்பட்டனர். மேலும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
முத்துப்பேட்டை;
முத்துப்பேட்டை அருகே சாலையோர குப்பையில் தீப்பிடித்தது. இதனால் புைக மூட்டத்தில் சிக்கி மக்கள் அவதிப்பட்டனர். மேலும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
கிழக்கு கடற்கரை சாலை
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள உதயமார்தாண்டபுரம் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் சாலையோரம் கொட்டப்படுகிறது. இந்த குப்ைபயில் அடிக்கடி தீப்பிடித்து எரிகிறது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் புகை பரவி எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவு புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
விபத்துகள்
இந்தநிலையில் நேற்று இந்த இடத்தில் குவிந்து கிடந்த குப்பையில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் இந்த சாலையில் காலை முதல் இரவு வரை அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். புகை மூட்டம் காரணமாக இந்த வழியாக சென்ற வாகனங்கள் மிகவும் மெதுவாக இயக்கப்பட்டன. சில வாகனங்கள் வேகமாக இயக்கப்பட்டது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. முத்துப்பேட்டையை அடுத்த உதயமார்தாண்டபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி இப்பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் இப்பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் குப்பைகள் கொட்டுவதை ஊராட்சி நிர்வாகம் தடு்க்க வேண்டும். தவறும்பட்சத்தில் நெடுஞ்சாலை துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story