ரூ.1 கோடியே 60 லட்சம் பறிமுதல்
நன்னிலம் அருகே உரிய ஆவணங்கள் இல்லாததால் ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.1 கோடியே 60 லட்சம் பறிமுதல் செய்ப்பட்டது.
நன்னிலம்;
நன்னிலம் அருகே உரிய ஆவணங்கள் இல்லாததால் ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.1 கோடியே 60 லட்சம் பறிமுதல் செய்ப்பட்டது.
வாகன சோதனை
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி திருவாரூர் மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிைலயில் கொல்லுமாங்குடியில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில் வேலங்குடி சோதனை சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை அதிகாரிகள் மறித்த சோதனை நடத்தினர். சோதனையில் வாகனத்தில் இருந்த பெட்டியில் கத்தை கத்தையாக 500 ரூபாய் நோட்டு கட்டுகள் இருந்தது. இது குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து கொண்டு ஏ.டி.எம்.களில் நிரப்ப கொண்டு சென்றது தெரியவந்தது.
ரூ.1 கோடியே 60 லட்சம்
இந்த பணத்துக்கான ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்த போது இதில் சில ஆவணங்கள் இல்லை. இதனால் வாகனத்தில் இருந்த ரூ.1 கோடியே 60 லட்சத்து 72 ஆயிரத்து 171-ஐ அதிகாரிகள் பறிமுதல் சய்து கருவூலத்தில் வைத்தனர். மேலும் உரிய ஆவணத்தை கொடுத்து பணத்தை பெற்றுச் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story