அமைச்சர் தங்கமணியை ஆதரித்து பிரசாரம்: தி.மு.க.வை நம்ப வேண்டாம் நடிகை விந்தியா பேச்சு
நம்ப வேண்டாம் நடிகை விந்தியா பேச்சு
குமாரபாளையம்:
குமாரபாளையம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் தங்கமணிக்கு ஆதரவாக நேற்று குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவில் நடிகை விந்தியா பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: கருணாநிதி தன் குடும்பத்திற்காக சொத்து சேர்த்தார். ஆனால் எம்.ஜி.ஆர். இரண்டு விரல்களை காட்டி மக்களை காத்தார். ஜெயலலிதா ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து இல்லை. அடுத்தவர் சொத்தை அபகரிக்க வில்லை. பெண்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சியில் இல்லை. அதனால் மின்வெட்டு, கட்டப்பஞ்சாயத்து இல்லை. மொத்தத்தில் தி.மு.க. மக்களுக்கு தேவை இல்லை. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று பேசினார். இதில் நகர அவைத் தலைவர் பழனிசாமி, பொருளாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல பள்ளிபாளையத்தில் உள்ள ஆவாரங்காடு எம்.ஜி.ஆர் சிலை அருகே அமைச்சர் தங்கமணியை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீண்டும் நீடிக்க உங்கள் வாக்கை இரட்டை இலை சின்னத்தில் செலுத்துங்கள். உங்கள் வீட்டிற்கு திருட வந்த திருடனை கூட நம்பலாம். ஆனால் தி.மு.க.வை நம்ப வேண்டாம் என்றார். இதில் நகர செயலாளர் வெள்ளிங்கிரி, தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில், வடக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் பேரவை செயலாளர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
=======
Related Tags :
Next Story