வாகன சோதனையில் பறக்கும் படையினர் தீவிரம்
கொள்ளிடம் சோதனை சாவடியில் வாகன சோதனையில் பறக்கும் படையினர் தீவிரம் ஈடுபட்டனா்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் சோதனை சாவடியில் வாகன சோதனையில் பறக்கும் படையினர் தீவிரம் ஈடுபட்டனா்.
வாகன சோதனையில்
கொள்ளிடம் சோதனை சாவடி, கடலூர் மாவட்டமும், மயிலாடுதுறை மாவட்டமும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த சோதனை சாவடியை கடந்து தான் அனைத்து வகையான வாகனங்களும் தேசிய நெடுஞ்சாலையில் சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம் மார்க்கமாக செல்லுகின்றன. தொடர்ந்து 24 மணிநேரமும் இந்த தேசிய நெடுஞ்சாலை வழியாக போக்குவரத்து நடைபெற்று கொண்டிருக்கின்றன.
கொள்ளிடம் சோதனை சாவடி முக்கியமான சோதனை சாவடி ஆக இருந்து வருவதால் தற்போது இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்து வகையான வாகனங்களையும் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் உடனுக்குடன் கொள்ளிடம் சோதனை சாவடிக்கு வந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இரவு- பகல் 24 மணி நேரமும் போலீசார் இங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனைச்சாவடி வழியாக தேர்தலுக்காக வாகனங்களில் பணம் மற்றும் பொருட்கள் எடுத்து செல்லப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து கடந்த இரண்டு நாட்களாக அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story