வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
வாடிப்பட்டி,
சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யும் பணி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலஅலுவலர் ஜஸ்டின் ஜெயபால் தலைமை தாங்கினார். உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி தாசில்தார் பழனிக்குமார், பி.டி.ஓ. பழனிச் சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர் ஜோதியாதவ் கலந்துகொண்டு வாக்குச் சாடிகளில் வாக்குப்பெட்டி ஒதுக்கீடு பணிபற்றி ஆலோச னைகள், தேர்தல் விதிமுறைகள், தேர்தல் காலத்தில் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள் பற்றி விளக்கி பேசினார்.
Related Tags :
Next Story