ஆ.ராசாவை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


ஆ.ராசாவை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 March 2021 2:03 AM IST (Updated: 31 March 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

ஆ.ராசாவை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் பற்றி தி.மு.க. எம்.பி. ஆ.ராசா அவதூறாக பேசியதாக கூறி அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதாவினர் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதே போல குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 
மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சேவியர் மனோகரன், பொருளாளர் திலக், இணை செயலாளர் லதா ராமசந்திரன், அணி செயலாளர் ஜெயசீலன், சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டு ஆ.ராசாவுக்கு எதிராக கண்டன கோ‌‌ஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Next Story