புகையிலையை பதுக்கி வைத்திருந்தவர் கைது
சிவகாசியில் புகையிலையை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி உட்கோட்டத்தில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் உத்தரவின் பேரில் திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் தலைமையில் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை செய்யப்பட்டது. இதில் திருத்தங்கலை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 43) என்பவர் சிவகாசி, திருத்தங்கல் மற்றும் கிராமப்பகுதியில் உள்ள கடைகளுக்கு புகையிலை பொருட்களை வினியோகம் செய்வதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் மற்றும் போலீசார் கார்த்திகேயனை கண்காணித்தனர். இதில் அவர் திருத்தங்கல் எஸ்.என்.புரம் ரோட்டில் உள்ள ஒரு குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு வினியோகம் செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்த குடோனுக்கு சென்று அங்கு இருந்த ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும், புகையிலை பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 430 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர். போலீசார் ஆய்வுக்காக குடோனுக்கு சென்ற போது அங்கிருந்த கார்த்திகேயன், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story