மீண்டும் கல்வி தொலைக்காட்சி மூலம் பயிற்சி


மீண்டும் கல்வி தொலைக்காட்சி மூலம் பயிற்சி
x
தினத்தந்தி 31 March 2021 2:16 AM IST (Updated: 31 March 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 9 முதல் பிளஸ்-1 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் கல்வி தொலைக்காட்சி மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

விருதுநகர், 
தமிழகத்தில் 9 முதல் பிளஸ்-1 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் கல்வி தொலைக்காட்சி மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. 
 கல்வி தொலைக்காட்சி 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.
 இதையடுத்து மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த ஏற்பாடு செய்தது. இதைத்தொடர்ந்து 2-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் கடந்த ஆண்டு ஜூலை 15-ந் தேதி முதல் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன.
 வகுப்புகள் ரத்து 
 மேலும் இந்த தொலைக்காட்சியின் வீடியோ பதிவுகள் ஆகஸ்டு மாதம் முதல் தனியார் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகின.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-1 வரையிலான மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புகளை ரத்து செய்தது. 
அறிவுறுத்தல்
 பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் அவர்களுக்கு நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தநிலையில் தற்போது மீண்டும் கல்வி தொலைக்காட்சி மூலம் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-1 வகுப்பு வரை மாணவர்களுக்குக்கு மீண்டும் மீதி உள்ள பாடங்களை நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
 தினமும் 9-ம் வகுப்பு வகுப்பு முதல் பிளஸ்-1 வகுப்புகளுக்கான நிகழ்ச்சிகளை கல்வி தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பவும், தொலைக்காட்சி சார்ந்த குழுவினருக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Next Story