புதிதாக 48 பேருக்கு கொரோனா


புதிதாக 48 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 31 March 2021 2:18 AM IST (Updated: 31 March 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக 48 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.

மதுரை, 
மதுரையில் நேற்று புதிதாக 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 35 பேர் நகர் பகுதியையும், 13 பேர் புறநகர் பகுதியையும் சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 777 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மதுரையில் சிகிச்சையில் இருந்து நேற்று 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதில் 11 பேர் நகர் பகுதியையும், 4 பேர் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களுடன் சேர்ந்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 27 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களை தவிர அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் 285 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story