வாக்குச்சீட்டு பொருத்தும் பணி


வாக்குச்சீட்டு பொருத்தும் பணி
x
தினத்தந்தி 31 March 2021 2:28 AM IST (Updated: 31 March 2021 2:28 AM IST)
t-max-icont-min-icon

வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி நடைபெற்றது.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையங்கள் வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு ஒப்புகைச்சீட்டு எந்திரங்கள் ஆகியவற்றை கணினி மென்பொருள் வழி சீரற்ற தேர்வின் வாயிலாக தேர்வு செய்யும் பணியானது தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்பாக நடைபெற்றது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை, பட்டியலை, வேட்பாளர்களுக்கு வழங்கும் பணியானது தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வழிமுறையாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குச்சீட்டுபொருத்தும் பணியானது இன்று காலை 8 மணி முதல் நடைபெறும் என மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.


Next Story