வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 16 பேருக்கு கொரோனா தொற்று
16 பேருக்கு கொரோனா தொற்று
சேலம்:
வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 49 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 38 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12 பேர், சேலம் ஒன்றியத்தில் 3 பேர், மேட்டூரில் 2 பேர், நங்கவள்ளி, கொளத்தூர், மேச்சேரி, தாரமங்கலம், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
மேலும் நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த 6 பேர், ஈரோட்டில் இருந்து சேலம் வந்த 5 பேர், திருச்சியில் இருந்து சேலம் வந்த 3 பேர், தர்மபுரியில் இருந்து சேலம் வந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
298 பேருக்கு சிகிச்சை
இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 436 ஆக அதிகரித்து உள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 34 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். 298 பேருக்கு தொடர்ந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story