ரூ.8 ¼ லட்சம் பறிமுதல்


பணம் பறிமுதல்
x
பணம் பறிமுதல்
தினத்தந்தி 31 March 2021 9:11 AM IST (Updated: 31 March 2021 9:11 AM IST)
t-max-icont-min-icon

ரூ.8 ¼ லட்சம் பறிமுதல்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே நெகமத்தில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், காரில் ஆவணங்கள் இல்லாமல்  ரூ.5 லட்சத்து 66 ஆயிரத்து 970 இருப்பது தெரியவந்தது. 

இது தொடர்பாக விசாரணை பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அதிகாரி வைத்திநாதனிடம் ஒப்படைத்தனர்.

இதுபோல் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் உடுமலையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.53 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.


தமிழக-கேரள எல்லையான கோபாலபுரம் சோதனை சாவடியில் கேரளாவை சேர்ந்த முகமது  என்பவர்  ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற  ரூ.66 ஆயிரத்து 500 -ஐபறிமுதல் செய்தனர். 

இதேபோன்று நெகமம் நால்ரோட்டில் பறக்கும்படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் இருந்து ஆவணங்கள் இல்லாததால் ரூ.78 ஆயிரத்து 100 பறிமுதல் செய்யப்பட்டது. 

பொள்ளாச்சி-கோவை ரோட்டில் பறக்கும்படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கூளநாயக்கன்பட்டியை சேர்ந்த தினேஷ் என்பவரிடம் இருந்து ஆவணங்கள் இல்லாததால் ரூ.58 ஆயிரத்து 326 பறிமுதல் செய்யப்பட்டது.

 பொள்ளாச்சி தொகுதியில் ஒரே நாளில் ரூ.8 லட்சத்து 23 ஆயிரத்து 396 பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story