திருவெறும்பூர் தொகுதியில் ம.நீ.ம. வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து இளைஞர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு
மக்கள் நீதி மய்யத்தின் இளைஞர்கள், வேட்பாளர் முருகானந்தத்தை வெற்றி பெற செய்வதே எங்களது லட்சியம் என சுறுசுறுப்புடன் களத்தில் இறங்கி ஓட்டு சேகரித்து வருகின்றனர்.
திருச்சி,
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் எம்.முருகானந்தம் தொகுதி முழுவதும் பம்பரமாக சுற்றி வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்கு சென்ற இடமெல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் வரவேற்று தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். நேற்று பொன்மலை, பொன் மலைப்பட்டி, எல்லகுடி, துவாக்குடி, அரியமங்கலம், கல்கண்டார்கோட்டை, கணேசபுரம், குமரேசபுரம், எழில் நகர், அண்ணா வளைவு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் நீதி மய்யத்தின் இளைஞர்கள், வேட்பாளர் முருகானந்தத்தை வெற்றி பெற செய்வதே எங்களது லட்சியம் என சுறுசுறுப் புடன் களத்தில் இறங்கி ஓட்டு சேகரித்து வருகின்றனர்.
மேலும் பிற கட்சியில் இருந் தும் மக்கள் நீதி மய்யத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர் கள், மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் தங்களை அக்கட்சியில் இணைந்து கொண்டு திருவெறும்பூர் வேட்பாளர் பொறியாளர் முருகானந் தத்தை ஆதரித்து வாக்குகளை சேரித்து வருகிறார் கள். தனது வெற்றிக்காக பாடு பட்டு வரும் இளைஞர் களி டம், நான் வெற்றி பெற் றவுடன் ரூ.20 பத்திரத்தில் உத்தரவாதம் அளித்தபடி இரண்டு ஆண்டுகளில் திருவெறும்பூருக்கு உட் பட்ட 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவேன் என உறுதி கூறினார்.
Related Tags :
Next Story