காவிரி கூட்டுக்குடிநீர் தினசரி கிடைக்க நடவடிக்கை துறையூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஸ்டாலின் குமார் வாக்குறுதி


காவிரி கூட்டுக்குடிநீர் தினசரி கிடைக்க நடவடிக்கை துறையூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஸ்டாலின் குமார் வாக்குறுதி
x
தினத்தந்தி 31 March 2021 10:02 AM IST (Updated: 31 March 2021 10:02 AM IST)
t-max-icont-min-icon

மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி கூட்டுக்குடிநீர் தினசரி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் துறையூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஸ்டாலின் குமார் வாக்குறுதி.

துறையூர், 

திருச்சி மாவட்டம், துறையூர் தனி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஸ்டாலின் குமார் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று துறையூர் தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டி காளிப்பட்டி, சிங்களாந்தபுரம், தெற்கீயூர், பகளவாடி, கீரிப்பட்டி, காற்று கருப்பன் கொட்டம் மறுக்கலாம் பட்டி, சமத்துவபுரம், கள்ளிக்குடி, வீர மச்சான் பட்டி, கங்காணி பட்டி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். அப்பொழுது ஸ்டாலின் குமார் பேசுகையில், துறையூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி கூட்டுக்குடிநீர் தினசரி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் எனது முயற்சியால் எடுக்கப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளது. தற்போது எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தால் பணிகளை விரைவில் முடித்து இரண்டு மாத கால அளவிற்குள் தினசரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறினார். பிரசாரத்தின் போது, சென்ற கிராமங்கள் அனைத்திலும் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும், மாலைகள் அணிவித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பிரசாரத்தின் போது மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் தர்மன் ராஜேந்திரன், நகர செயலாளர் மெடிக்கல் முரளி, ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு அமைப்பாளர் மகாலிங்கம், ஒன்றிய பொருளாளர் சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி மதியழகன், மாவட்ட கவுன்சிலர் தமயந்தி, பகளவாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூபதி, கண்ணனூர் ஊராட்சி மன்ற தலைவர் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஸ்டாலின் குமாருக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர்.

Next Story