மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் ஊட்டி வருகை
தேர்தல் பிரச்சாரம் செய்ய மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் ஊட்டிக்கு வருகிறார். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஊட்டி
தேர்தல் பிரச்சாரம் செய்ய மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் ஊட்டிக்கு வருகிறார். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஊட்டி வருகை
நீலகிரி மாவட்டம் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் புதன்கிழமை ஊட்டி வருகிறார்.
இதற்காக அவர் கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டிக்கு மதியம் வந்தடைகிறார்.
பின்னர் ராஜ்நாத்சிங் மற்றும் கட்சி நிர்வாகிகள் கேசினோ சந்திப்பில் இருந்து வாக்கு சேகரித்தபடி ஊர்வலமாக (ரோடு ஷோ) கமர்சியல் சாலை, மணிகூண்டு வழியாக ஏ.டி.சி. பகுதிக்கு செல்கின்றனர்.
அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மத்திய ராணுவ மந்திரி பேசுகிறார்.
பலத்த பாதுகாப்பு
ஊட்டிக்கு மத்திய மந்திரி வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மத்திய மந்திரி ஊட்டிக்கு வந்து செல்லும் இடங்களில் செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேசிய பாதுகாப்பு படையினர் உள்ளூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருடன் இணைந்து ஆய்வு செய்தனர்.
மேலும் ஊட்டியில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதற்காக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
வாகனங்களை நிறுத்தக்கூடாது
பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு கருதி மாலை 5 மணி முதல் புதன்கிழமை மாலை 6 மணி வரை ஊட்டி சேரிங்கிராஸ் முதல் பஸ்நிலையம் வரை கமர்சியல் சாலை மற்றும் மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்கள், வியாபாரிகள் வாகனங்களை நிறுத்த கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story