லால்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் சவுந்தரபாண்டியனுக்கு ஆதரவு கேட்டு கே.என்.நேரு தீவிர பிரசாரம்


லால்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் சவுந்தரபாண்டியனுக்கு ஆதரவு கேட்டு கே.என்.நேரு தீவிர பிரசாரம்
x
தினத்தந்தி 31 March 2021 4:22 PM IST (Updated: 31 March 2021 4:22 PM IST)
t-max-icont-min-icon

லால்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் சவுந்தரபாண்டியனுக்கு ஆதரவு கேட்டு கே.என்.நேரு தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டார்.

கல்லக்குடி, 

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சவுந்தரபாண்டியனை ஆதரித்து தி.மு.க. முதன்மைகழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு  வாளாடி, லால்குடி, பூவாளூர், புள்ளம்பாடி, கல்லக்குடி, பெருவளப்பூர் ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அவர் கூறியதாவது:- 

தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் லால்குடி தொகுதிக்கு அரசின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். உதாரணமாக கொள்ளிட ஆற்றில் செங்கரையூர்-பூண்டி பாலம், குமுளூரில் அரசு கலைகல்லூரி, வேளாண்மை கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம், லால்குடியில் பாலிடெக்னிக் கல்லூரி, தீயணைப்பு நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், புள்ளம்பாடியில் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையும், சமுதாய கூடங்கள், அனைத்து கிராமத்திற்கும் பஸ் வசதி மற்றும் பஸ்நிலையங்கள் அமைத்துள்ளோம். நான் முதன்முதலில் புள்ளம்பாடி ஒன்றிய பெருந்தலைவராக தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக இன்று தி.மு.க. முதன்மை செயலாளராக பணிபுரிந்து வருகிறேன். 

நான் திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் எனது தாய்வீடான லால்குடி தொகுதிக்கு தேவையான திட்டங்களை தேவையான இடங்களில் பெற்று தொகுதி தன்னிறைவு பெரும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்வேன். தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் ஓராண்டிற்குள் புள்ளம்பாடியில் பொதுபணித்துறை இடத்தில் அரசு கலைகல்லூரி அமைப்போம். தொடர்ந்து நீங்கள் சவுந்தரபாண்டியனுக்கு  உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். 

உடன் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, திருச்சி மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ்,  புள்ளம்பாடி ஒன்றிய குழு தலைவர் ரசியாகோல்டன்ராஜேந்திரன்,  நகரசெயலாளர்கள் முத்துகுமார், பால்துரை, புள்ளம்பாடி நகர இளைஞரணி செயலாளர் தியாகு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story