தியாகதுருகத்தில் டிராக்டர் மோதி ரேஷன் கடை விற்பனையாளர் பலி


தியாகதுருகத்தில் டிராக்டர் மோதி ரேஷன் கடை விற்பனையாளர் பலி
x
தினத்தந்தி 31 March 2021 10:35 PM IST (Updated: 31 March 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகத்தில் டிராக்டர் மோதி ரேஷன் கடை விற்பனையாளர் பலி

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே கல் சிறுநாகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் சசி(வயது 30). ரேஷன் கடை விற்பனையாளரான இவர் தியாகதுருகம் அண்ணாநகரில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு தியாகதுருகம் நோக்கி வந்து கொண்டிருந்தார். 
கலையநல்லூர் பிரிவு சாலை அருகே வந்த போது தியாகதுருகத்தில் இருந்து கலையநல்லூர் பிரிவு சாலையில் டிராக்டர் ஒன்று திரும்பிய போது எதிர்பாரதவிதமாக டிராக்டர் டிப்பர் சசி மீது மோதியது. 

இதில் டிப்பர் சக்கரம் சசியின் உடல் மீது ஏறி இறங்கியதால் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சசி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story