முதியவருக்கு ஆயுள் தண்டனை


தண்டனை
x
தண்டனை
தினத்தந்தி 31 March 2021 11:22 PM IST (Updated: 31 March 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

முதியவருக்கு ஆயுள் தண்டனை.

கோவை,

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கொண்டையாம்பாளையத்தை சேர்ந்தவர் நஞ்சப்பன் (வயது60). கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ந்தேதி 5வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தார். 

பேரூர் அனைத்து மகளிர் போலீசார் நஞ்சப்பனை கைது செய்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். 

இதையடுத்து கோவை போக்சோ கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. குற்றம் சாட்டப்பட்ட நஞ்சப்பனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.56ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி ராதிகா தீர்ப்பளித்தார். 

அபராத தொகையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் ரஷிதா பேகம் ஆஜர் ஆனார்.

Next Story