3 பேருக்கு கொரோனா


3 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 31 March 2021 11:25 PM IST (Updated: 31 March 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி பகுதியில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சிங்கம்புணரி, 
சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டி என்ற பகுதியில் ஒரு பெண்ணுக்கும் சிங்கம்புணரி நகர்புறத்தில் ஒரு ஆண், ஒரு பெண் என மொத்தம் 3 பேருக்கு தொடர்ச்சியாக கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் தற்போது அரசு சிவகங்கை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் நபிஷாபானு,  சிங்கம்புணரி பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்க்கவேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். சிங்கம்புணரி பாரிவள்ளல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story