தர்மபுரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தர்மபுரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தர்மபுரி,
தர்மபுரி அருகே உள்ள கடுக்கம்பட்டியை சேர்ந்தவர் மனோகரன். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றார். பின்னர் மீண்டும் அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மனோகரன் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்்தது.
வலைவீச்சு
இதுகுறித்து அவர் மதிகோன்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது வீடு பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகையை திருடி சென்றது தெரியவந்தது. இந்த திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story