100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஓவியம்


100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஓவியம்
x
தினத்தந்தி 1 April 2021 12:44 AM IST (Updated: 1 April 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கடலூரில் வரையப்பட்ட விழிப்புணர்வு ஓவியத்தை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டார்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 6-ந்தேதி தேர்தல் நடக்கிறது. 
இதையொட்டி வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடலூர் டவுன்ஹால் எதிேர சாலையில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரமாண்ட ஓவியம் வரையப்பட்டு உள்ளது.
இதை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டார். தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை வாசித்தார். அப்போது, மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்று உறுதி மொழியை அனைவரும் கூறி ஏற்றுக்கொண்டனர்.

துண்டுபிரசுரம்

அதன்பிறகு பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று விளக்கி அந்த வழியாக வந்த பஸ் பயணிகளிடமும், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களிடமும் துண்டுபிரசுரம் வழங்கி கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மகேந்திரன், மகளிர் திட்ட அலுவலர் செந்தில்வடிவு, கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், வட்டாட்சியர் பலராமன் மற்றும் அரசு அலுவலர்கள், மகளிர் சுயஉதவிகுழுவினர் கலந்து கொண்டனர்.

Next Story