வாணாபுரம் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி பலி
தினத்தந்தி 1 April 2021 12:50 AM IST (Updated: 1 April 2021 12:50 AM IST)
Text Sizeவாணாபுரம் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி பலி
வாணாபுரம்
வாணாபுரம் அருகே ஆத்திப்பாடி செல்லும் சாலையை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 55). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி கோவிந்தன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
வாணாபுரம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire