நெல்லையில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
நெல்லையில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூர் மணிமூர்த்தீசுவரம் செல்லப்பாண்டியன் நகரை சேர்ந்த இசக்கிமுத்து மகன் மணிகண்டன் (வயது 21). வண்ணார்பேட்டை வளையாபதி தெருவை சேர்ந்த செல்லையா மகன் சுடலைமுத்து (23). இவர்கள் 2 பேரும் சந்திப்பு பகுதியில் கொலை முயற்சி, பொது மக்களை அச்சுறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதையொட்டி 2 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு உத்தரவிட்டார். இதையடுத்து நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, மணிகண்டன், சுடலைமுத்து ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.
Related Tags :
Next Story