நெரிஞ்சிப்பேட்டை செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா குண்டம் அமைக்க குழி தோண்டியபோது அம்மன் உருவம் தெரிந்ததாக பரபரப்பு
நெரிஞ்சிப்பேட்டை செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவில் குண்டம் அமைக்க குழி தோண்டியபோது அம்மன் உருவம் தெரிந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
நெரிஞ்சிப்பேட்டை செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவில் குண்டம் அமைக்க குழி தோண்டியபோது அம்மன் உருவம் தெரிந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
அம்மன் உருவம்
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டையில் பிரசித்திபெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திருவிழா கடந்த 14-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேத்துடன் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் கோவில் முன்பு குண்டம் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டது. குண்டம் வெட்டிய குழிக்கு அருகிலேயே பால் குழி வெட்டுவது வழக்கம். அவ்வாறு வெட்டும்போது பால் குழியின் பக்கவாட்டில் அம்மன் முகம் போன்ற உருவம் மண்ணில் தெரிந்தது.
பக்தர்கள் பரவசம்
இதைப்பார்த்த பக்தர் ஒருவர் அந்த இடத்திலேயே அருள் வந்து சாமி ஆடினார். இந்த தகவல் அந்த பகுதியில் வேகமாக பரவியது. இதனால் நள்ளிரவு நேரத்திலும் பக்தர்கள் அங்கு கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர். உருவம் தெரிந்த பால்குழியை பார்த்து பக்தர்கள் , “ஓம் சக்தி, பராசக்தி” என பரவசமடைந்தனர். மேலும் செல்போனிலும் பக்தர்கள் படம் எடுத்தனர். சிறிது நேரத்தில் அந்த உருவம் மறைந்துவிட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை குண்டம் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களது் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
Related Tags :
Next Story