சேலத்தில் வேனில் கொண்டு வரப்பட்ட ரூ.22½ லட்சம் பறிமுதல்
வேனில் கொண்டு வரப்பட்ட ரூ.22½ லட்சம் பறிமுதல்
சேலம்:
சேலத்தில் வேனில் கொண்டு வரப்பட்ட ரூ.22½ லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் சேலம் மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு வரப்படும் பணம் மற்றும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓமலூர் சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முரளிகணேஷ் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி, அதில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஓமலூர் பகுதியை சேர்ந்த சங்கர் என்பது தெரியவந்தது.
பறிமுதல்
மேலும் வேனில் சோதனை நடத்திய போது அதில் ரூ.22 லட்சத்து 64 ஆயிரத்து 336 இருந்தது. ஆனால் அவரிடம் அதற்கான ஆவணம் இல்லை. இதையடுத்து உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்டதாக ரூ.22 லட்சத்து 64 ஆயிரத்து 336-ஐ பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story