ஜலகண்டாபுரம் பேரூராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ தீயணைப்பு படையினர் 8½ மணி நேரம் போராடி அணைத்தனர்


ஜலகண்டாபுரம் பேரூராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ தீயணைப்பு படையினர் 8½ மணி நேரம் போராடி அணைத்தனர்
x
தினத்தந்தி 1 April 2021 4:55 AM IST (Updated: 1 April 2021 4:55 AM IST)
t-max-icont-min-icon

குப்பை கிடங்கில் திடீர் தீ

மேச்சேரி:
ஜலகண்டாபுரம் பேரூராட்சியில் கம்போஸ்ட் ரோடு பகுதியில் குப்பைகளை சேகரித்து குவித்து வைத்துள்ளனர். இதில் நேற்று நண்பகல் 12 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், ஜலகண்டாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ராம கணேஷ், நங்கவள்ளி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். 
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் சோமசுந்தரம் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைக்க போராடினர். நேற்று இரவு 9 மணி வரை சுமார் 8½ மணி நேரத்திற்கு மேல் போராடி தீ பரவாமல் அணைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது. குப்பை கிடங்கில் தீப்பற்றி எரிந்தது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story